• Dec 03 2024

ஹட்டன் நகரப் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடான நிலை

Tharmini / Oct 31st 2024, 10:55 am
image

ஹட்டன் நகரின் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதால், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹட்டன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வில்பிரட் புர, காமினி புர, பண்டாரநாயக்க புர, உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் உரிய முறையில் அகற்ற படாமையால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அப்பிரதேசங்களைச் சேர்ந்த பலர், நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ள தோடு, சுகாதார சீர்கேடான நிலை தோன்றியுள்ளது .

குறித்த பிரதேசங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமைகள் குறித்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் செயலாளர் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் ஆராய்ந்து உரிய அதிகாரிகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பண்டார தெரிவித்தார்.


ஹட்டன் நகரப் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடான நிலை ஹட்டன் நகரின் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதால், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது ஹட்டன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வில்பிரட் புர, காமினி புர, பண்டாரநாயக்க புர, உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் உரிய முறையில் அகற்ற படாமையால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அப்பிரதேசங்களைச் சேர்ந்த பலர், நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகரித்துள்ள தோடு, சுகாதார சீர்கேடான நிலை தோன்றியுள்ளது .குறித்த பிரதேசங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.இந்த நிலைமைகள் குறித்து ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் செயலாளர் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய அதிகாரிகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பண்டார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement