• Sep 21 2024

ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்து!

Tamil nila / Feb 11th 2023, 9:12 pm
image

Advertisement

ரஷ்ய வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், அத்தகைய வாய்ப்புக்கள் குறித்து கட்டுமானக்கைத் தொழிற்துறை உள்ளிட்ட  ரஷ்யாவின் பல்வேறு துறைசார் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் ஜனித்தா லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு தாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


இலங்கையில் எப்போதும் முதலீடுகளுக்கான வாய்ப்பு உள்ளது. அதனை முன்னிறுத்தி நாம் ரஷ்ய முயற்சியாளர்களுடனும் ரஷ்யாவிலுள்ள கட்டுமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம் என்று லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.


அதுமாத்திரமன்றி ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு தாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெகுவிரைவில் ரஷ்யாவில் வர்த்தக மையமொன்றைத் திறப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், தேயிலை, தெங்கு உற்பத்திகள், வாசனைத்திரவியங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனித்தா லியனகே தெரிவித்துள்ளார். 


அத்தோடு இலங்கையின் போக்குவரத்துத்துறை மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர்கள் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்து ரஷ்ய வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், அத்தகைய வாய்ப்புக்கள் குறித்து கட்டுமானக்கைத் தொழிற்துறை உள்ளிட்ட  ரஷ்யாவின் பல்வேறு துறைசார் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் ஜனித்தா லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு தாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்இலங்கையில் எப்போதும் முதலீடுகளுக்கான வாய்ப்பு உள்ளது. அதனை முன்னிறுத்தி நாம் ரஷ்ய முயற்சியாளர்களுடனும் ரஷ்யாவிலுள்ள கட்டுமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம் என்று லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.அதுமாத்திரமன்றி ரஷ்ய நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிக்குமாறு தாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெகுவிரைவில் ரஷ்யாவில் வர்த்தக மையமொன்றைத் திறப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், தேயிலை, தெங்கு உற்பத்திகள், வாசனைத்திரவியங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனித்தா லியனகே தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையின் போக்குவரத்துத்துறை மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர்கள் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement