• May 03 2024

உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் விஜயம்! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 5:38 pm
image

Advertisement

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யுக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

யுக்ரைனில் தரையிறங்கியதும், அமெரிக்க ஜனாதிபதி, "படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து, கீவ் வலுவாக உள்ளது. யுக்ரைனும் ஜனநாயகத்துடன் வலுவாக நிலைத்து நின்கிறது" என்று கூறினார்.

கடுமையான இராணுவ மோதலுக்கு நடுவில் இருக்கும் யுக்ரைனுக்கான இந்த அவசர விஜயத்திற்காக கீவ்வில் தரையிறங்கினார்.

பைடனின் வருகை ரகசியமாக அமைந்ததுடன், அவருடன் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே வருகைதந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கியை, மரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்து, பீரங்கி, வெடிமருந்துகள் உட்பட உள்ளிட்ட புதிய ஆயுதங்களுக்கு மேலும் 500 மில்லியன் டொலர்களை ஜனாதிபதி பைடன் அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி போலந்துக்கு இரண்டு நாள் பயணமாக இன்று (20) மாலை வாஷிங்டனில் இருந்து புறப்படவிருந்தார்.

யுக்ரைனுக்கான பைடனின் ரகசியப் பயணம், போலந்து எல்லையில் இருந்து தொடரூந்து வழியாக மேற்கொள்ளப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களால் கீவ் விஜயம் ரகசியமாகவே இருந்தது. சனிக்கிழமை இரவு ஒரு உணவகத்தில் அவரும் அவரது மனைவி ஜில் பைடனும் ஒரு அரிய விருந்து சாப்பிட்ட பிறகு பைடன் எந்த அறிவிப்பும் இல்லாமல் வொஷிங்டனை விட்டு வெளியேறினார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

கிழக்கு ஐரோப்பாவுக்கான திட்டமிட்ட பயணத்தில் ஜனாதிபதி யுக்ரைனுக்குச் செல்வார் என்பதை அதிகாரிகள் மறுத்திருந்தனர்.


உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் விஜயம் SamugamMedia அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யுக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அவரது இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.யுக்ரைனில் தரையிறங்கியதும், அமெரிக்க ஜனாதிபதி, "படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து, கீவ் வலுவாக உள்ளது. யுக்ரைனும் ஜனநாயகத்துடன் வலுவாக நிலைத்து நின்கிறது" என்று கூறினார்.கடுமையான இராணுவ மோதலுக்கு நடுவில் இருக்கும் யுக்ரைனுக்கான இந்த அவசர விஜயத்திற்காக கீவ்வில் தரையிறங்கினார்.பைடனின் வருகை ரகசியமாக அமைந்ததுடன், அவருடன் இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே வருகைதந்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி பைடன், யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கியை, மரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்து, பீரங்கி, வெடிமருந்துகள் உட்பட உள்ளிட்ட புதிய ஆயுதங்களுக்கு மேலும் 500 மில்லியன் டொலர்களை ஜனாதிபதி பைடன் அறிவித்தார்.அமெரிக்க ஜனாதிபதி போலந்துக்கு இரண்டு நாள் பயணமாக இன்று (20) மாலை வாஷிங்டனில் இருந்து புறப்படவிருந்தார்.யுக்ரைனுக்கான பைடனின் ரகசியப் பயணம், போலந்து எல்லையில் இருந்து தொடரூந்து வழியாக மேற்கொள்ளப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.பாதுகாப்புக் காரணங்களால் கீவ் விஜயம் ரகசியமாகவே இருந்தது. சனிக்கிழமை இரவு ஒரு உணவகத்தில் அவரும் அவரது மனைவி ஜில் பைடனும் ஒரு அரிய விருந்து சாப்பிட்ட பிறகு பைடன் எந்த அறிவிப்பும் இல்லாமல் வொஷிங்டனை விட்டு வெளியேறினார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.கிழக்கு ஐரோப்பாவுக்கான திட்டமிட்ட பயணத்தில் ஜனாதிபதி யுக்ரைனுக்குச் செல்வார் என்பதை அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement