• Nov 24 2024

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் வி.உருத்திரகுமாரன் தேர்வு

Chithra / May 29th 2024, 7:20 am
image



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேச அரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்தது.

மூன்று நாள் அரசவை அமர்வாக மே 17,18,19 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்தன. 

நியு யோர்க்கின் பிரதான மைய அரசவை அமர்வில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்றேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர். 

மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

முதன்நாள் அமர்வில் அரசவைத் தலைவர், உதவி அரசவைத்தலைவர், பிரதமருக்கான தேர்வு இடம்பெற்றிருந்தது.

முன்னராக அங்குரார்ப்பண நிகழ்வில் துருக்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமாகிய  கறோ பயலன், ஆர்மேனிய இனப்படுகொலையின் நீதிக்கான போராட்டம் பற்றி சிறப்புரையாற்றியிருந்தார்.

கனடா மொன்றியல் பல்கலைக்கழக பேராசிரியர் டானியல் ருறிப்   கியூபெக்கின் பொதுவாக்கெடுப்பு அனுபவங்கள் தொடர்பில் சிறப்புரையாற்றியிருந்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அரசவை அமர்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்துள்ளதோடு, 2009 ஆம் ஆண்டு தமிழின அழிப்புக்கு பின்னரான ஈழத் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை சர்வதேச ஜனநாயக அரசியல் வெளியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் உருத்திரகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அவைத் தலைவராக, முன்னாள் உதவி அவைத் தலைவராக இருந்த கலையழகன் கார்த்திகேசு, உதவி அவைத் தலைவராக கௌசலா விஜிதரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் வி.உருத்திரகுமாரன் தேர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேச அரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்தது.மூன்று நாள் அரசவை அமர்வாக மே 17,18,19 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்தன. நியு யோர்க்கின் பிரதான மைய அரசவை அமர்வில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டிருந்தனர்.மேலும் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்றேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர். மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.முதன்நாள் அமர்வில் அரசவைத் தலைவர், உதவி அரசவைத்தலைவர், பிரதமருக்கான தேர்வு இடம்பெற்றிருந்தது.முன்னராக அங்குரார்ப்பண நிகழ்வில் துருக்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமாகிய  கறோ பயலன், ஆர்மேனிய இனப்படுகொலையின் நீதிக்கான போராட்டம் பற்றி சிறப்புரையாற்றியிருந்தார்.கனடா மொன்றியல் பல்கலைக்கழக பேராசிரியர் டானியல் ருறிப்   கியூபெக்கின் பொதுவாக்கெடுப்பு அனுபவங்கள் தொடர்பில் சிறப்புரையாற்றியிருந்தார்.தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அரசவை அமர்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராக இருந்துள்ளதோடு, 2009 ஆம் ஆண்டு தமிழின அழிப்புக்கு பின்னரான ஈழத் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை சர்வதேச ஜனநாயக அரசியல் வெளியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் உருத்திரகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.அவைத் தலைவராக, முன்னாள் உதவி அவைத் தலைவராக இருந்த கலையழகன் கார்த்திகேசு, உதவி அவைத் தலைவராக கௌசலா விஜிதரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement