கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதாக அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பெண் ஒருவரினால் இந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் தலைமையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வசந்த யாப்பாவுக்கு பெண் ஒருவரினால் மிரட்டல் அழைப்பு. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இரண்டு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதாக அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.பெண் ஒருவரினால் இந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் தலைமையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.