• Nov 23 2024

வற் வரி திருத்தத்தம் வெதுப்பாக உரிமையாளர்களை பாதிக்கும் அபாயம்...!samugammedia

Anaath / Dec 26th 2023, 4:00 pm
image

வற் எனப்படும்  பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படையும் அபாயத்தில் உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த சங்கத்தின்  தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கையில், வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வற் வரியின் ஊடாக வெதுப்பக தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது.

இந்தநிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இதே வேளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற் வரி திருத்தத்தம் வெதுப்பாக உரிமையாளர்களை பாதிக்கும் அபாயம்.samugammedia வற் எனப்படும்  பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படையும் அபாயத்தில் உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அந்த சங்கத்தின்  தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கையில், வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது 15 சதவீதமாக காணப்படுகின்ற வற் வரியின் ஊடாக வெதுப்பக தொழிற்துறை பாதிப்படைந்த நிலைமையில் உள்ளது.இந்தநிலையில் அதனை 18 சதவீதமாக அதிகரிப்பது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தற்போதைய நிலையில் புதிய வரி திருத்தத்துக்கு அமைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படுமாயின் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.அத்துடன் வெதுப்பக உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக வீழ்ச்சியடையும் என வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த இதே வேளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement