• Nov 24 2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம்..!!

Tamil nila / May 20th 2024, 7:40 pm
image

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலோடு  சிறப்பாக இடம் பெற்று வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாகக இடம்பெற்று வருகின்றது.


வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுடைய வைகாசி விசாக பொங்கல் இன்று அதிகாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையிலே முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலைமைகளுக்கு மத்தியிலே இன்று காலை வேளையிலேயே மிக அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்ததை அவதானிக்க கூடியதாக இருக்கின்ற அதே வேளையிலே பல்வேறு இடங்களிலும் இருந்து வருகை தந்து இருக்கின்ற பக்தர்கள் தூக்குக்காவடி காவடி பால் செம்பு கற்பூரச் சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டிருப்பதோடு அம்மனுக்கு பொங்கல் பொங்கி படையல் இட்டு தங்களது நேர்த்திகளை செய்து வருகின்றனர் 

மேலும் வழமைக்கு மாறாக இன்று காலை வேளையிலேயே ஆலயத்திலே அதிகளவான  பக்தர்களை காணக் கூடியதாக இருப்பதோடு பாதுகாப்பு கடமைகளில் விஷேடமாக பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இன்று இரவு பாரம்பரிய முறைப்படி வளர்ந்து நேர்ந்து பொங்கல் உற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலோடு  சிறப்பாக இடம் பெற்று வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாகக இடம்பெற்று வருகின்றது.வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுடைய வைகாசி விசாக பொங்கல் இன்று அதிகாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலே முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலைமைகளுக்கு மத்தியிலே இன்று காலை வேளையிலேயே மிக அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்ததை அவதானிக்க கூடியதாக இருக்கின்ற அதே வேளையிலே பல்வேறு இடங்களிலும் இருந்து வருகை தந்து இருக்கின்ற பக்தர்கள் தூக்குக்காவடி காவடி பால் செம்பு கற்பூரச் சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டிருப்பதோடு அம்மனுக்கு பொங்கல் பொங்கி படையல் இட்டு தங்களது நேர்த்திகளை செய்து வருகின்றனர் மேலும் வழமைக்கு மாறாக இன்று காலை வேளையிலேயே ஆலயத்திலே அதிகளவான  பக்தர்களை காணக் கூடியதாக இருப்பதோடு பாதுகாப்பு கடமைகளில் விஷேடமாக பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு இன்று இரவு பாரம்பரிய முறைப்படி வளர்ந்து நேர்ந்து பொங்கல் உற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement