• May 12 2024

வட்டு தலங்கைமங்கை குளம் புனரமைத்து விவசாயிகளிடம் கையளிப்பு..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 12:15 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை சித்தன்கேணி  துறட்டிப்பனை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.

சங்கானை தெற்கு கமக்கார அமைப்பின் ஆதரவுடன் உலக சித்தன்கேணி ஒன்றிய மக்களின் நிதி அனுசரணையுடன் ப்ரத்யங்கிரா அறக்கட்டளையால் இந்தக் குளம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில்  யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி  ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார்

இதன் பொழுது மதகுருமார், வடமாகாண ஆளுநரின் செயலாளர், சுழிபுரம் கமநல சேவைகள் நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள், சித்தன்கேணி உலக ஒன்றியத்தின் பிரதிநிதி, ப்ரத்யங்கிரா அறக்கட்டளையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





வட்டு தலங்கைமங்கை குளம் புனரமைத்து விவசாயிகளிடம் கையளிப்பு.samugammedia வட்டுக்கோட்டை சித்தன்கேணி  துறட்டிப்பனை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.சங்கானை தெற்கு கமக்கார அமைப்பின் ஆதரவுடன் உலக சித்தன்கேணி ஒன்றிய மக்களின் நிதி அனுசரணையுடன் ப்ரத்யங்கிரா அறக்கட்டளையால் இந்தக் குளம் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில்  யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி  ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார் இதன் பொழுது மதகுருமார், வடமாகாண ஆளுநரின் செயலாளர், சுழிபுரம் கமநல சேவைகள் நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள், சித்தன்கேணி உலக ஒன்றியத்தின் பிரதிநிதி, ப்ரத்யங்கிரா அறக்கட்டளையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement