• May 18 2024

ஆற்றில் தத்தளித்த பெண்..!சற்றும் தயங்காது பாலத்தில் இருந்து குதித்த நபர்...!தேடிவந்த 35லட்சம்...!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 12:24 pm
image

Advertisement

ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றியமைக்காக ஆடவர் ஒருவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது,.

இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அந்த நாட்டை சேர்ந்த பெங் கிங்ளினின் என்பவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், உணவுக்கு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய மிதிவண்டியில் சென்றுள்ளார்.

அதன் பொழுது, கியான்டாங் சாலையின் அருகே ஆற்றில் பெண் ஒருவர் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

சற்றும் தாமதிக்காது  பெங் கிங்ளினின்,12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

அவர் தண்ணீரில் குதித்த பின்னர் பொலிஸார்  மற்றும் லைஃப் படகுகள் அங்கு விரைந்து  அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றியமைக்காக பொலிஸாரும், அலுவலக நிர்வாகமும் சேர்ந்து அவருக்கு  35 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர்.

அத்துடன், ஒரு பல்கலைக்கழகத்தில் இலவசமாக  உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பையும் அவர்  பெற்றுள்ளார்.

இதையடுத்து பெங் தெரிவிக்கையில்,பாலத்தின் உயரத்தை பார்த்த வேளை தனது  கால்கள் நடுங்கியதாகவும், ஆயினும் உயிரை காப்பாற்ற ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரை விட விலை மதிப்பற்றது எதுவுமில்லை என்றும் தான் குதித்து இருக்காவிடில் அவள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை காப்பாற்றிய பெங்கிற்கு  அந்த பெண் நன்றி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் தத்தளித்த பெண்.சற்றும் தயங்காது பாலத்தில் இருந்து குதித்த நபர்.தேடிவந்த 35லட்சம்.samugammedia ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றியமைக்காக ஆடவர் ஒருவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது,. இச்சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டை சேர்ந்த பெங் கிங்ளினின் என்பவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், உணவுக்கு டெலிவரி செய்வதற்காக தன்னுடைய மிதிவண்டியில் சென்றுள்ளார். அதன் பொழுது, கியான்டாங் சாலையின் அருகே ஆற்றில் பெண் ஒருவர் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டுள்ளார். சற்றும் தாமதிக்காது  பெங் கிங்ளினின்,12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் மீது ஏறி தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.அவர் தண்ணீரில் குதித்த பின்னர் பொலிஸார்  மற்றும் லைஃப் படகுகள் அங்கு விரைந்து  அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றியமைக்காக பொலிஸாரும், அலுவலக நிர்வாகமும் சேர்ந்து அவருக்கு  35 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். அத்துடன், ஒரு பல்கலைக்கழகத்தில் இலவசமாக  உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பையும் அவர்  பெற்றுள்ளார். இதையடுத்து பெங் தெரிவிக்கையில்,பாலத்தின் உயரத்தை பார்த்த வேளை தனது  கால்கள் நடுங்கியதாகவும், ஆயினும் உயிரை காப்பாற்ற ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரை விட விலை மதிப்பற்றது எதுவுமில்லை என்றும் தான் குதித்து இருக்காவிடில் அவள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னை காப்பாற்றிய பெங்கிற்கு  அந்த பெண் நன்றி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement