• Jun 27 2024

வவுனியா இரட்டைக்கொலைச் சம்பவம்...! 5 சந்தேக நபர்கள் கைது..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 9:01 am
image

Advertisement

தோனிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை அதிகாலை வீடு புகுந்த குழு வொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டது.

இந்தச்சம்பவத்தில் மூச்சு திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன். 10 பேர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதில் எரிகாயங்களுக்கு உள்ளான கணவனும் பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 5பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வவுனியா இரட்டைக்கொலைச் சம்பவம். 5 சந்தேக நபர்கள் கைது.samugammedia தோனிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை அதிகாலை வீடு புகுந்த குழு வொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டது. இந்தச்சம்பவத்தில் மூச்சு திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன். 10 பேர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் எரிகாயங்களுக்கு உள்ளான கணவனும் பின்னர் உயிரிழந்திருந்தார்.இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. பலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 5பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement