• Sep 21 2024

மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவரிடம் பணத்தை வாங்கி மறைந்த நபர்கள்: வவுனியாவில் சம்பவம்! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 6:35 pm
image

Advertisement

மாடு வாங்குவதற்காக ஆர்வம் கொண்டிருந்த மல்லாவியை சேர்ந்த நபரிடம் வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பதற்கிருப்பதாக தெரிவித்து பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதன்போது மாடுகள் வேறு இருந்தால் கூறுங்கள் என மல்லாவியை சேர்ந்தவர் அவரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கிருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை. ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளர்.

இந்நிலையில் நகைகளை அடைவு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார். குறித்த மாடுகளுடன் வேறு இருவரும் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்க சென்ற சமயம் மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார். இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர் மாட்டையும் காணாமல் கொண்டு சென்றவர்களையும் காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார். எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.

இந் நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பத்து இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர். 

மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவரிடம் பணத்தை வாங்கி மறைந்த நபர்கள்: வவுனியாவில் சம்பவம் samugammedia மாடு வாங்குவதற்காக ஆர்வம் கொண்டிருந்த மல்லாவியை சேர்ந்த நபரிடம் வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பதற்கிருப்பதாக தெரிவித்து பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளனர்.மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதன்போது மாடுகள் வேறு இருந்தால் கூறுங்கள் என மல்லாவியை சேர்ந்தவர் அவரிடம் கூறியுள்ளார்.இந்நிலையில் அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கிருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை. ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளர்.இந்நிலையில் நகைகளை அடைவு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார். குறித்த மாடுகளுடன் வேறு இருவரும் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்க சென்ற சமயம் மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார். இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர் மாட்டையும் காணாமல் கொண்டு சென்றவர்களையும் காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார். எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.இந் நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பத்து இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement