• May 02 2024

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரகங்கள் நாளை மீண்டும் பிரதிஷ்டை!samugammedia

Sharmi / Mar 31st 2023, 10:55 pm
image

Advertisement

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரகங்கள் நாளை (01) மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுமென  ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து மீறல்களுக்கான தீர்வு காணும் கலந்துரையாடலின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகங்கள் சிவபூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மக்கள் வழிபட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என நெடுந்தீவுப் பகுதி இந்து பிரதிநிதி ஒருவரால் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 1953 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் தொகை இரண்டாவது பெரிய மதம் எனும் நிலையில் இருந்து மாறியுள்ளதாக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளார்.

 மூடப்படும் இந்துப் பாடசாலைகள் இந்து அமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் இறுக்கமான சமய நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சைவ அபிவிருத்திக்காக ஒரு பிரதான சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சபை சொல்வதை மக்களும் அரசாங்கமும் செவிமடுக்கும் அளவுக்கு செயற்பட வேண்டும் என்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்லியல் திணைக்களம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியன தம்மை நெருக்குகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரகங்கள் நாளை மீண்டும் பிரதிஷ்டைsamugammedia நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரகங்கள் நாளை (01) மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுமென  ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து மீறல்களுக்கான தீர்வு காணும் கலந்துரையாடலின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகங்கள் சிவபூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,  வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மக்கள் வழிபட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என நெடுந்தீவுப் பகுதி இந்து பிரதிநிதி ஒருவரால் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மேலும், கடந்த 1953 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் தொகை இரண்டாவது பெரிய மதம் எனும் நிலையில் இருந்து மாறியுள்ளதாக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளார். மூடப்படும் இந்துப் பாடசாலைகள் இந்து அமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் இறுக்கமான சமய நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், சைவ அபிவிருத்திக்காக ஒரு பிரதான சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சபை சொல்வதை மக்களும் அரசாங்கமும் செவிமடுக்கும் அளவுக்கு செயற்பட வேண்டும் என்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளார்.இதேவேளை, தொல்லியல் திணைக்களம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியன தம்மை நெருக்குகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement