• Sep 17 2024

வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை!

Chithra / Jan 18th 2023, 9:13 pm
image

Advertisement

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது, பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். 

அதன் போது, பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன் போது வேலன் சுவாமி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி, சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.

மன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் வேலன் சுவாமிகளை மன்று பிணையில் செல்ல அனுமதித்தது.

அதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும்  பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது, பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். அதன் போது, பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.அதன் போது வேலன் சுவாமி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி, சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.மன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் வேலன் சுவாமிகளை மன்று பிணையில் செல்ல அனுமதித்தது.அதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும்  பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement