• May 12 2024

விக்கியின் முகத்திரை 2020ஆம் ஆண்டே கிழிந்து விட்டது – கஜேந்திரன் காட்டம்

Chithra / Feb 7th 2023, 5:59 pm
image

Advertisement


இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம் என்ற வகையிலே தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்கள அரசாங்கம் வழங்குவதற்கான அழுத்தத்தை இந்தியா நினைத்தால் தற்போது கொடுக்கமுடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இந்தியா சிங்கள புத்திஜீவிகளை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே சிங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு திணிக்கப்படுவதை மட்டுமே தாம் எதிர்பதாகவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்க வில்லை என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற விக்கினேஸ்வரன் 13ஆம் திருத்தச்சட்டம் வேண்டுமென சம்பந்தனுடன் இணைந்து கையொம்பம் இட்டதன் மூலம் அவரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


விக்கியின் முகத்திரை 2020ஆம் ஆண்டே கிழிந்து விட்டது – கஜேந்திரன் காட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம் என்ற வகையிலே தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்கள அரசாங்கம் வழங்குவதற்கான அழுத்தத்தை இந்தியா நினைத்தால் தற்போது கொடுக்கமுடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறிப்பாக இந்தியா சிங்கள புத்திஜீவிகளை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே சிங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.ஒற்றையாட்சிக்குள் தீர்வு திணிக்கப்படுவதை மட்டுமே தாம் எதிர்பதாகவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்க வில்லை என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.2020ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற விக்கினேஸ்வரன் 13ஆம் திருத்தச்சட்டம் வேண்டுமென சம்பந்தனுடன் இணைந்து கையொம்பம் இட்டதன் மூலம் அவரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement