• May 02 2024

விஜயகாந்த் குறித்து வௌியான தகவல் -மருத்துவமனை அவசர அறிக்கை! samugammedia

Tamil nila / Nov 29th 2023, 9:54 pm
image

Advertisement

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ம் திகதி அனுமதிக்கப்பட்டார். 

சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதன் பின்னர் மீண்டும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

அதில், விஜயகாந்த் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார் என்றும் விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். 

இதனிடையே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், "தமிழக திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.







விஜயகாந்த் குறித்து வௌியான தகவல் -மருத்துவமனை அவசர அறிக்கை samugammedia "தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ம் திகதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.இதன் பின்னர் மீண்டும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், விஜயகாந்த் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார் என்றும் விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில், அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனிடையே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், "தமிழக திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement