• Aug 01 2025

இலங்கை சிறுவர்களிடையே நிலவும் விட்டமின் டி குறைபாடு - எச்சரிக்கும் சுகாதாரத்துறை

Chithra / Jul 30th 2025, 1:17 pm
image

 

சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாக இல்லை என்று, குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள சிறுவர்கள் வெளியே சென்று வெயிலில் விளையாடுவதற்குப் பதிலாக, தங்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் படிப்பது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது, இணைய விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அதிகமாக தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மிகவும் மும்முரமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செயற்பாடுகளுக்கு மாறாக, சிறுவர்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் இயற்கையாகவே சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யினைப் பெற முடிந்தாலும், சிறுவர்களிடையே அதிகமாக விட்டமின் டி குறைபாடு காணப்படுகின்றது. 

மேலும், அடுத்த தலைமுறைக்குச் சூரிய ஒளி வெளிப்பாடு மிகவும் முக்கியமானதொன்று எனவும், சூரிய ஒளி வெளிப்பாட்டிற்குச் சிறந்த நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், நெத்தலி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முருங்கை இலைகள் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.


இலங்கை சிறுவர்களிடையே நிலவும் விட்டமின் டி குறைபாடு - எச்சரிக்கும் சுகாதாரத்துறை  சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாக இல்லை என்று, குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சிறுவர்கள் வெளியே சென்று வெயிலில் விளையாடுவதற்குப் பதிலாக, தங்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் படிப்பது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது, இணைய விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அதிகமாக தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மிகவும் மும்முரமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு மாறாக, சிறுவர்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இயற்கையாகவே சூரிய ஒளியிலிருந்து விட்டமின் டி யினைப் பெற முடிந்தாலும், சிறுவர்களிடையே அதிகமாக விட்டமின் டி குறைபாடு காணப்படுகின்றது. மேலும், அடுத்த தலைமுறைக்குச் சூரிய ஒளி வெளிப்பாடு மிகவும் முக்கியமானதொன்று எனவும், சூரிய ஒளி வெளிப்பாட்டிற்குச் சிறந்த நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நெத்தலி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முருங்கை இலைகள் போன்ற விட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement