• May 22 2024

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல்; நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்! samugammedia

Tamil nila / Nov 11th 2023, 3:15 pm
image

Advertisement

பதினான்கு மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து அவசரநிலையை அறிவித்துள்ளது.

அடுத்தடுத்து பலமுறை ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்தே ஐஸ்லாந்து அரசு நேற்றையதினம் அவசரநிலையை அறிவித்தது.

இது எரிமலை குமறுவதற்கு முன்னோட்டமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரிண்டவிக் ஊர்வாசிகளை ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 4,000 பேர் வசித்து வருகின்றனர்.

குறித்த பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஐஸ்லாந்தில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிரிண்டவிக் அமைந்துள்ளது.

தலைநகர் ரெய்க்யவிக்கிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இருமுறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐஸ்லாந்தின் தென்கடலோரப் பகுதியிலுள்ள வீடுகளிலுள்ள பொருட்களும் குலுங்கியுள்ளன.

நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 எனப் பதிவானதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஐஸ்லாந்தின் தென்மேற்கு வட்டாரத்தில் கடந்த அக்டோபர் முதல் 24,000 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கிட்டத்தட்ட 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

நிலத்திற்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் எரிமலைக் குழம்பு ஒன்றுதிரண்டு வருகிறது என்றும் அது மேல்நோக்கிக் கிளம்பினால் எரிமலை வெடிக்கக்கூடும் என்றும் மையம் கூறியுள்ளது.

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல்; நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் samugammedia பதினான்கு மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து அவசரநிலையை அறிவித்துள்ளது.அடுத்தடுத்து பலமுறை ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்தே ஐஸ்லாந்து அரசு நேற்றையதினம் அவசரநிலையை அறிவித்தது.இது எரிமலை குமறுவதற்கு முன்னோட்டமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதனையடுத்து, ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரிண்டவிக் ஊர்வாசிகளை ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 4,000 பேர் வசித்து வருகின்றனர்.குறித்த பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.நேற்றைய தினம் ஐஸ்லாந்தில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிரிண்டவிக் அமைந்துள்ளது.தலைநகர் ரெய்க்யவிக்கிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இருமுறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஐஸ்லாந்தின் தென்கடலோரப் பகுதியிலுள்ள வீடுகளிலுள்ள பொருட்களும் குலுங்கியுள்ளன.நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 எனப் பதிவானதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.ஐஸ்லாந்தின் தென்மேற்கு வட்டாரத்தில் கடந்த அக்டோபர் முதல் 24,000 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அம்மையம் குறிப்பிட்டுள்ளது.அதிலும் குறிப்பாக, வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கிட்டத்தட்ட 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.நிலத்திற்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் எரிமலைக் குழம்பு ஒன்றுதிரண்டு வருகிறது என்றும் அது மேல்நோக்கிக் கிளம்பினால் எரிமலை வெடிக்கக்கூடும் என்றும் மையம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement