• May 10 2024

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Nov 1st 2023, 11:09 am
image

Advertisement


நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை,  குருநாகல், மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்ட  குறித்த அறிவிப்பு  இன்று  புதன்கிழமை (01) வரை அமுலில் உள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை நில்வளா கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகல ஓயாவை அண்மித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்காரணமாக அத்தனகல, கம்பஹா, ஜா-எல மற்றும் வத்தளையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அக்குரஸ்ஸ, மாலிபொட, மாத்தறை மற்றும் திஹாகொட பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட நில்வளா கங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ளவர்களும் சிறியளவிலான வெள்ள அபாயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்களும் உயர் மட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும்,  இந்த ஆறுகளின் அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழை பெய்தால், வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை,  குருநாகல், மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்ட  குறித்த அறிவிப்பு  இன்று  புதன்கிழமை (01) வரை அமுலில் உள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .இதேவேளை நில்வளா கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தனகல ஓயாவை அண்மித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்காரணமாக அத்தனகல, கம்பஹா, ஜா-எல மற்றும் வத்தளையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், அக்குரஸ்ஸ, மாலிபொட, மாத்தறை மற்றும் திஹாகொட பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட நில்வளா கங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ளவர்களும் சிறியளவிலான வெள்ள அபாயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்களும் உயர் மட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும்,  இந்த ஆறுகளின் அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழை பெய்தால், வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement