• Jan 26 2025

55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு; தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Jan 21st 2025, 10:38 am
image

 

இதேவேளை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு,

60க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி அம்பாறையில் 9 குளங்களில் 8 குளங்களும் - பதுளையில் 7 குளங்களில் 4 குளங்களும், மட்டக்களப்பில் 4 குளங்களில் 3 குளங்ளும், அம்பாந்தோட்டையில் 10 குளங்களில் 4 குளங்களும், காலியில் 2 குளங்களில் 1 குளமும், கண்டியில் 3 குளங்களில் 2 குளங்களும், குருணாகலில் 10 குளங்களில் 9 குளங்களும், மொனராகலையில் 3 குளங்களில் 2 குளங்களும், திருகோணமலையில் 5 குளங்களில் 4 குளங்களும், மன்னாரில் 4 குளங்களில் 2 குளங்களிலும்  நீர்மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த குளங்களில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்நில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.


 

55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு; தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை  இதேவேளை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு,60க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அம்பாறையில் 9 குளங்களில் 8 குளங்களும் - பதுளையில் 7 குளங்களில் 4 குளங்களும், மட்டக்களப்பில் 4 குளங்களில் 3 குளங்ளும், அம்பாந்தோட்டையில் 10 குளங்களில் 4 குளங்களும், காலியில் 2 குளங்களில் 1 குளமும், கண்டியில் 3 குளங்களில் 2 குளங்களும், குருணாகலில் 10 குளங்களில் 9 குளங்களும், மொனராகலையில் 3 குளங்களில் 2 குளங்களும், திருகோணமலையில் 5 குளங்களில் 4 குளங்களும், மன்னாரில் 4 குளங்களில் 2 குளங்களிலும்  நீர்மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.இந்த குளங்களில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்நில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement