முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியொதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நோயாளர் விடுதி தொகுதியொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ருஹுணு கதிர்காமம் தேவாலய உண்டியலுக்கு பக்தர்கள் செலுத்திய நேர்த்தி மற்றும் காணிக்கைப் பணத்தில் இருந்து மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நோயாளர் விடுதி தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் எந்தவொரு வௌி தரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் மற்றும் இவ்வாறான செயற்பாடுகளை சுகாதாரத்துறையில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.
அவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் அரசாங்கத்திடம் கையளித்த பின்னர், அதன் மூலம் அரசாங்கத்துக்கு வேண்டாத சுமை ஏற்படுகின்றது.
கட்டிடம் இருக்கின்றது, வசதிகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று பொதுமக்கள் அரசாங்கத்தைத் தான் குறை கூறுவார்கள்.
ருஹுணை கதிர்காம தேவாலயம் மட்டுமன்றி முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களும் ஒன்று சேர்ந்து ஒதுக்கும் நிதியை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியையே ஒதுக்கீடு செய்துள்ளது.
இனி வரும் காலங்களிலும் அவ்வாறே நிதியொதுக்கப்படும் எதிர்வரும் 20 ஆண்டுகாலத்தை உத்தேசித்தே எங்களுடைய சுகாதாரக் கொள்கைகள் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும்.
அதன்போது வெளி தரப்பினருடன் தலையீடுகள், நிதிஅன்பளிப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு வௌிதரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் எங்களுக்கு தேவையில்லை அமைச்சர் நளிந்த முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியொதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நோயாளர் விடுதி தொகுதியொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.ருஹுணு கதிர்காமம் தேவாலய உண்டியலுக்கு பக்தர்கள் செலுத்திய நேர்த்தி மற்றும் காணிக்கைப் பணத்தில் இருந்து மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நோயாளர் விடுதி தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் எந்தவொரு வௌி தரப்பினரதும் நிதி அன்பளிப்புகள் மற்றும் இவ்வாறான செயற்பாடுகளை சுகாதாரத்துறையில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.அவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் அரசாங்கத்திடம் கையளித்த பின்னர், அதன் மூலம் அரசாங்கத்துக்கு வேண்டாத சுமை ஏற்படுகின்றது. கட்டிடம் இருக்கின்றது, வசதிகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று பொதுமக்கள் அரசாங்கத்தைத் தான் குறை கூறுவார்கள்.ருஹுணை கதிர்காம தேவாலயம் மட்டுமன்றி முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களும் ஒன்று சேர்ந்து ஒதுக்கும் நிதியை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியையே ஒதுக்கீடு செய்துள்ளது.இனி வரும் காலங்களிலும் அவ்வாறே நிதியொதுக்கப்படும் எதிர்வரும் 20 ஆண்டுகாலத்தை உத்தேசித்தே எங்களுடைய சுகாதாரக் கொள்கைகள் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும்.அதன்போது வெளி தரப்பினருடன் தலையீடுகள், நிதிஅன்பளிப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.