தேர்தலில் வெல்லப்போகின்றவரோடு சுயாதீனமாக பேச்வார்த்தை செய்யலாம். அதற்கு எங்களுக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணணன் தெரிவித்துள்ளார்.
இன்று(10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டாலும் யாரோ ஒருவர் தென்னிலங்கையில் வெற்றியடையத்தான் போகிறார். அதை மாற்றமுடியாது. தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிபீடமேற்ற கொண்டுவர துடித்தார்கள். அவ்வாறே அவரை கொண்டுவந்தார்கள். இதே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு சொன்னார்கள். தமிழ் மக்களும் வாக்களித்தார்கள். இதன்போதும் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடைக்கவில்லை. 2015 இலே அவர்கள் சொன்ன கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 2019 இலே அவர்கள் சொன்ன தரப்பு தோல்வி அடைந்தது வெற்றியடைத்தபோதும் சரி, தோல்வி அடைந்தபோதும் சரி, எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆகவே நாங்கள் புறக்கணித்தாலும் சரி, வாக்களித்தாலும் சரி, தென்னிலங்கையில் ஒருவர் ஆட்சிப்பீடம் ஏறத்தான் போகின்றார். எனத் தெரிவித்துள்ள அவர், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தெரிவிக்கையில்
நாங்கள் தென்னிலங்கையில் இருக்க கூடிய ஒரு தரப்பு சார்ந்தவர்கள் அல்ல நாங்கள், யார் வந்தாலும் அரசியல் உரிமை தொடர்பாக பேரம் பேசக்கூடிய சுயாதீனமாக இருக்கிறோம் என்கின்ற செய்தியை நாங்கள் சொல்ல முடியும . அத்துடன் நாங்கள் நடு நிலைமையாக இருக்க முடியும்.
2010 இலே மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தோம். ஆகவே நாங்கள் தேர்தலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடியாதவர்களாக இருதோம் . காரணம் என்னவென்றால் அவருக்கு எதிரானவர்களோடு அணி சேர்ந்தது. அதே போன்று 2019 ஆம் ஆண்டு கோட்டபாய போட்டியிட்ட போது அவருக்கு எதிரானவர்களுக்கு வாக்களித்தோம். அதுவே அவரினுடைய கோபத்தையும் எதிர்ப்பையும் சம்பாதிக்கின்ற விடயமாக இருந்தது. அவர் வென்றார் ஆனால் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.
ஆகவே தென்னிலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுவோர்களிடம் முரண்பாடுகளும் தேவையில்லை. அணி சேர்த்தல்களும் தேவையில்லை. வெல்லப்போகின்றவர்களோடு சுயாதீனமாக இருந்து கொண்டு எதிர்காலத்திலே பேச்சுவார்த்தையை செய்யலாம். அந்த கோட்பாட்டை காட்டுவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை தந்துள்ளார்கள். என அவர் தெரிவித்துள்ளார்.
யார் வென்றாலும் சரி தோற்றாலும் சரி ஆட்சிப்பீடம் ஏறுவோரிடம் பேச்சுவார்த்தை நடத்த எங்களிடம் மக்களின் ஆணை உள்ளது - மணிவண்ணன் தெரிவிப்பு தேர்தலில் வெல்லப்போகின்றவரோடு சுயாதீனமாக பேச்வார்த்தை செய்யலாம். அதற்கு எங்களுக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணணன் தெரிவித்துள்ளார்.இன்று(10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாங்கள் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டாலும் யாரோ ஒருவர் தென்னிலங்கையில் வெற்றியடையத்தான் போகிறார். அதை மாற்றமுடியாது. தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிபீடமேற்ற கொண்டுவர துடித்தார்கள். அவ்வாறே அவரை கொண்டுவந்தார்கள். இதே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு சொன்னார்கள். தமிழ் மக்களும் வாக்களித்தார்கள். இதன்போதும் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடைக்கவில்லை. 2015 இலே அவர்கள் சொன்ன கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 2019 இலே அவர்கள் சொன்ன தரப்பு தோல்வி அடைந்தது வெற்றியடைத்தபோதும் சரி, தோல்வி அடைந்தபோதும் சரி, எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் புறக்கணித்தாலும் சரி, வாக்களித்தாலும் சரி, தென்னிலங்கையில் ஒருவர் ஆட்சிப்பீடம் ஏறத்தான் போகின்றார். எனத் தெரிவித்துள்ள அவர், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தெரிவிக்கையில் நாங்கள் தென்னிலங்கையில் இருக்க கூடிய ஒரு தரப்பு சார்ந்தவர்கள் அல்ல நாங்கள், யார் வந்தாலும் அரசியல் உரிமை தொடர்பாக பேரம் பேசக்கூடிய சுயாதீனமாக இருக்கிறோம் என்கின்ற செய்தியை நாங்கள் சொல்ல முடியும . அத்துடன் நாங்கள் நடு நிலைமையாக இருக்க முடியும். 2010 இலே மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தோம். ஆகவே நாங்கள் தேர்தலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடியாதவர்களாக இருதோம் . காரணம் என்னவென்றால் அவருக்கு எதிரானவர்களோடு அணி சேர்ந்தது. அதே போன்று 2019 ஆம் ஆண்டு கோட்டபாய போட்டியிட்ட போது அவருக்கு எதிரானவர்களுக்கு வாக்களித்தோம். அதுவே அவரினுடைய கோபத்தையும் எதிர்ப்பையும் சம்பாதிக்கின்ற விடயமாக இருந்தது. அவர் வென்றார் ஆனால் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை.ஆகவே தென்னிலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுவோர்களிடம் முரண்பாடுகளும் தேவையில்லை. அணி சேர்த்தல்களும் தேவையில்லை. வெல்லப்போகின்றவர்களோடு சுயாதீனமாக இருந்து கொண்டு எதிர்காலத்திலே பேச்சுவார்த்தையை செய்யலாம். அந்த கோட்பாட்டை காட்டுவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை தந்துள்ளார்கள். என அவர் தெரிவித்துள்ளார்.