• May 18 2024

ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் உறுப்பினரையே களமிறக்குவோம்: ராஜபக்சர்களை வீழ்த்தவே முடியாது! ரோஹித சூளுரை

Chithra / Aug 30th 2023, 8:29 am
image

Advertisement

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பொதுவேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பயாகலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

"முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நாடாளுமன்றத்தில் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவு செய்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசைத் தோற்றுவித்துள்ளதால் எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவுள்ளது எனக் குறிப்பிடப்படும் செய்தி அடிப்படையற்றது.

வாடகைக்கு வேட்பாளரைப் பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. எமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரைக் களமிறக்குவோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்களை அறிவிப்போம். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல தீர்மானங்களைத் தற்போது முன்னெடுத்துள்ளோம்.

மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு உள்ள செல்வாக்கை ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. ராஜபக்சக்களை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது." என தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் உறுப்பினரையே களமிறக்குவோம்: ராஜபக்சர்களை வீழ்த்தவே முடியாது ரோஹித சூளுரை "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பொதுவேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.பயாகலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,"முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நாடாளுமன்றத்தில் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவு செய்தோம்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசைத் தோற்றுவித்துள்ளதால் எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவுள்ளது எனக் குறிப்பிடப்படும் செய்தி அடிப்படையற்றது.வாடகைக்கு வேட்பாளரைப் பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. எமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரைக் களமிறக்குவோம்.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்களை அறிவிப்போம். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல தீர்மானங்களைத் தற்போது முன்னெடுத்துள்ளோம்.மக்கள் மத்தியில் ராஜபக்சக்களுக்கு உள்ள செல்வாக்கை ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. ராஜபக்சக்களை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது." என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement