• Nov 28 2024

மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவோம்- யாழில் சஜித் உறுதி..!

Sharmi / Sep 16th 2024, 9:22 am
image

மக்கள் எமக்கு ஆணை தந்தால் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக குறுகிய காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில்  நேற்றையதினம்(15) யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

"வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபானசாலை அனுமதிப் பத்திரம்என்பனவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள்.

"வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை வைத்திருக்க முடியாது. 

அது நாட்டின் ஐக்கியத்தைப் பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை. வடக்கு, கிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்டுவோம். வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்."

கோட்டாபயவும் ரணிலும் நிறுத்திய வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். தொழில் செய்கின்றவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் மேம்படுத்துவோம். இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்துவோம்- யாழில் சஜித் உறுதி. மக்கள் எமக்கு ஆணை தந்தால் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக குறுகிய காலத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில்  நேற்றையதினம்(15) யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்."வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபானசாலை அனுமதிப் பத்திரம்என்பனவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள்."வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தைப் பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ள அனுமதி இல்லை. வடக்கு, கிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்டுவோம். வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்."கோட்டாபயவும் ரணிலும் நிறுத்திய வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். தொழில் செய்கின்றவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் மேம்படுத்துவோம். இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement