• Nov 23 2024

இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!!

Tamil nila / Mar 22nd 2024, 11:09 pm
image

இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) நடைபெற்ற “உறுமய” காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தின் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள பாரிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05,10 வருடங்களில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்கிற்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற நான் அனைவரையும் அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு. இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) நடைபெற்ற “உறுமய” காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தின் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள பாரிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 05,10 வருடங்களில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்கிற்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற நான் அனைவரையும் அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement