• May 03 2024

இலங்கை வானிலையில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்- மக்களே அவதானம்..!!

Tamil nila / Apr 11th 2024, 7:17 am
image

Advertisement

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (11.04.2024) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவ மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க நாளை நண்பகல் 12.11 அளவில் பத்தலகுண்டு, மதவாச்சி, ஹொரவப்பொத்தானை மற்றும் திருகோணமலை பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இலங்கை வானிலையில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்- மக்களே அவதானம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (11.04.2024) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.கிழக்கு மற்றும் ஊவ மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம்.இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க நாளை நண்பகல் 12.11 அளவில் பத்தலகுண்டு, மதவாச்சி, ஹொரவப்பொத்தானை மற்றும் திருகோணமலை பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement