• Apr 28 2024

77 ஓட்டங்களுக்குள் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்

harsha / Dec 11th 2022, 8:30 pm
image

Advertisement

மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியஅணி 419 ஓட்டங்களால் வெற்றியிட்டியது.

 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்  அணி தனது 2 ஆவது இன்ங்ஸில் 77 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இவ்வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரின் வெற்றியையும் அவுஸ்திரேலியா கைப்பற்றியது

அவுஸ்திரேலியாவின் அடிலெயட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 214 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இதன்படி, மேற்கிந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 497 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயி;க்கப்பட்டது. ஆனால், அவ்வணி 77 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் மேற்கிந்திய அணி பெற்ற 2 ஆவது ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.  

மேற்கிந்திய அணி சார்பில் ஆகக்கூடுதலாக டேஜாநரின் சந்தர்போல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஸ்கொட் போலன்ட் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மைக்கல் நேசர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

நேதன் லியோன் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய 450 ஆவது விக்கெட் ஆகும். ஷேன் வோர்ன், கிளென் மெக்ராத் ஆகியோருக்கு அடுத்ததாக இந்த மைல்கல்லை அடைந்த 3 ஆவது அவுஸ்திரேலிய வீரர் நேதன் லியோன் ஆவார்.

77 ஓட்டங்களுக்குள் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியஅணி 419 ஓட்டங்களால் வெற்றியிட்டியது. போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்  அணி தனது 2 ஆவது இன்ங்ஸில் 77 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.இவ்வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரின் வெற்றியையும் அவுஸ்திரேலியா கைப்பற்றியதுஅவுஸ்திரேலியாவின் அடிலெயட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 214 ஓட்டங்களைப் பெற்றது.அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.இதன்படி, மேற்கிந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 497 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயி;க்கப்பட்டது. ஆனால், அவ்வணி 77 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.இது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் மேற்கிந்திய அணி பெற்ற 2 ஆவது ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.  மேற்கிந்திய அணி சார்பில் ஆகக்கூடுதலாக டேஜாநரின் சந்தர்போல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஸ்கொட் போலன்ட் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மைக்கல் நேசர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.நேதன் லியோன் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் வீழ்த்திய 450 ஆவது விக்கெட் ஆகும். ஷேன் வோர்ன், கிளென் மெக்ராத் ஆகியோருக்கு அடுத்ததாக இந்த மைல்கல்லை அடைந்த 3 ஆவது அவுஸ்திரேலிய வீரர் நேதன் லியோன் ஆவார்.

Advertisement

Advertisement

Advertisement