• May 17 2024

பாபர் மசூதிக்கு நடந்தது – யாழ் தையிட்டி விகாரைக்கு நடக்கும் - மைத்திரியிடம் எச்சரித்த சிவசேனை அமைப்பு.! samugammedia

Chithra / Jun 29th 2023, 3:10 pm
image

Advertisement

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் 

ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கைவைக்கும் பொது காஸ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கணணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மைதிரிபால சிறிசேன உண்மையில் சைவர் என்றும் உலக்திற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதிக்கு நடந்தது – யாழ் தையிட்டி விகாரைக்கு நடக்கும் - மைத்திரியிடம் எச்சரித்த சிவசேனை அமைப்பு. samugammedia இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வடக்கு கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்துள்ளார்.இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கைவைக்கும் பொது காஸ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கணணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் வடக்கு கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.மைதிரிபால சிறிசேன உண்மையில் சைவர் என்றும் உலக்திற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement