• May 20 2024

அமைச்சர்கள் மாறினால் என்ன..? தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத வரை நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது! சிறிதரன் எம்.பி samugammedia

Chithra / Oct 24th 2023, 12:57 pm
image

Advertisement

 

பொதுஜன பெரமுனவுடைய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதனுடன் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தை பேணுவதற்காகவும் அவர் எடுத்துள்ள மாற்றங்களில் ஒன்றாக தான் இந்த அமைச்சரவை மாற்றம் தென்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னை தற்பாதுகாத்து கொள்வதற்காகவும், தன்னுடைய இருப்பை பேணிக்கொள்வதற்காகவும் பல கைதரியங்களை ஆற்றுகின்றார். 

ஒரு சில விடயங்களை பொதுஜன பெரமுனவுடைய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதனுடன் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தை பேணுவதற்காகவும் அவர் எடுத்துள்ள மாற்றங்களில் ஒன்றாக தான் இந்த அமைச்சரவை மாற்றம் தென்படுகின்றது.

இலங்கையினுடைய அமைச்சர்கள் மாறினால் என்ன, ஜனாதிபதி மாறினால் என்ன, அவர்கள் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணாதவரைக்கும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு முன்வைக்காத வரைக்கும் ஒரு நீதியான, நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமையுள்ள அரசை உருவாக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தை சிங்கள தலைவர்கள் எப்போது புரிந்து கொள்ளுகின்றார்களோ அப்போது தான் இந்த அரசியல் மாற்றங்களோ அமைச்சர் மாற்றங்களோ இந்த நாட்டிற்கு அபிவிருத்தியாக மாறும்.

அதனை விடுத்து வேறு ஒருவருடைய மன எண்ணங்களுக்காக மாற்றங்களை செய்வது அல்லது சிங்கள மக்களை திருப்திப்படுத்த செய்கின்ற வேலைத்திட்டங்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

அமைச்சர்கள் மாறினால் என்ன. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காத வரை நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது சிறிதரன் எம்.பி samugammedia  பொதுஜன பெரமுனவுடைய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதனுடன் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தை பேணுவதற்காகவும் அவர் எடுத்துள்ள மாற்றங்களில் ஒன்றாக தான் இந்த அமைச்சரவை மாற்றம் தென்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னை தற்பாதுகாத்து கொள்வதற்காகவும், தன்னுடைய இருப்பை பேணிக்கொள்வதற்காகவும் பல கைதரியங்களை ஆற்றுகின்றார். ஒரு சில விடயங்களை பொதுஜன பெரமுனவுடைய நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதனுடன் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தை பேணுவதற்காகவும் அவர் எடுத்துள்ள மாற்றங்களில் ஒன்றாக தான் இந்த அமைச்சரவை மாற்றம் தென்படுகின்றது.இலங்கையினுடைய அமைச்சர்கள் மாறினால் என்ன, ஜனாதிபதி மாறினால் என்ன, அவர்கள் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணாதவரைக்கும், தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு முன்வைக்காத வரைக்கும் ஒரு நீதியான, நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமையுள்ள அரசை உருவாக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.இந்த யதார்த்தத்தை சிங்கள தலைவர்கள் எப்போது புரிந்து கொள்ளுகின்றார்களோ அப்போது தான் இந்த அரசியல் மாற்றங்களோ அமைச்சர் மாற்றங்களோ இந்த நாட்டிற்கு அபிவிருத்தியாக மாறும்.அதனை விடுத்து வேறு ஒருவருடைய மன எண்ணங்களுக்காக மாற்றங்களை செய்வது அல்லது சிங்கள மக்களை திருப்திப்படுத்த செய்கின்ற வேலைத்திட்டங்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement