உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை ஒன்றாம் நாள் விளங்குகிறது.
இது தமிழ் புத்தாண்டு என்றும், சித்திரை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு உதயமாகிறது. சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்கிறர். இந்த ஆண்டு புத்தாண்டின் சிறப்பு என்னவென்றால், குருவும் சூரியனுடன் அமர்ந்துள்ளார் என்பதுதான். ஏனென்றால், இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு.
குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு, இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும் என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே மலரும். குரு – சூரியன் இணைவு, சூரியனால் ஏற்படும் பல தோஷங்களை நீக்கிவிடும். சூரியன் உச்சமாகும் நிலையில் அவருடன் குருபகவான் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, சூரியன் மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
மங்களகரமான ஸ்ரீ குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, 14-04-2024 அன்று, சித்திரை திங்கள் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. . அன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை சாமி கும்பிட நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோதி ஆண்டு வெண்பா என்ன சொல்கிறது என்றால், "கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்”. இதற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை, களவு, பகை பெருகும், திருடர்கள் மக்களை தாக்குவார்கள், பயம் மிகுதியாகும். பருவமழை குறைவாகவே பொழியும் என்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி பார்த்தோமேயானால், இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பின்போது, குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடைபெறும் மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே இருக்கும் என்று நம்பலாம்.
தமிழ் புத்தாண்டு நாளில், பிறருக்கு தானம் செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம். தண்ணீர், மோர், குடை, செருப்பு, உணவு உள்ளிட்ட அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு, நம்மால் முடிந்தவற்றை மக்களுக்கு வழங்கி வழிபாடு செய்யலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, உணவு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு தினத்தில் இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சி மிகுந்த பானங்களை தானம் செய்வதால், வாழ்க்கையில் நமக்கு உணவு பஞ்சம் ஏற்படாது என்று முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்கினால் குறையாத செல்வம் நம்மைத் தேடி வரும் என்றும், மஞ்சள், குங்குமம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தால், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே இந்த சிறப்பான நாளில் அதிகாலை எழுந்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். புது வருடத்தில் தாம்பூல தட்டில் தாம்பூல பொருட்கள், நவதானியங்கள், மா, பலா, வாழை வைத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பை தரும்.
பிறக்கப்போகும் "குரோதி" வருடம் எப்படி இருக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை ஒன்றாம் நாள் விளங்குகிறது. இது தமிழ் புத்தாண்டு என்றும், சித்திரை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பு உதயமாகிறது. சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்கிறர். இந்த ஆண்டு புத்தாண்டின் சிறப்பு என்னவென்றால், குருவும் சூரியனுடன் அமர்ந்துள்ளார் என்பதுதான். ஏனென்றால், இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு.குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு, இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும் என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே மலரும். குரு – சூரியன் இணைவு, சூரியனால் ஏற்படும் பல தோஷங்களை நீக்கிவிடும். சூரியன் உச்சமாகும் நிலையில் அவருடன் குருபகவான் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும்.பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, சூரியன் மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.மங்களகரமான ஸ்ரீ குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, 14-04-2024 அன்று, சித்திரை திங்கள் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. . அன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை சாமி கும்பிட நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.குரோதி ஆண்டு வெண்பா என்ன சொல்கிறது என்றால், "கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்”. இதற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை, களவு, பகை பெருகும், திருடர்கள் மக்களை தாக்குவார்கள், பயம் மிகுதியாகும். பருவமழை குறைவாகவே பொழியும் என்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி பார்த்தோமேயானால், இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பின்போது, குருவுடன் உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வு. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடைபெறும் மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு என்பதால், இந்த குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாகவே இருக்கும் என்று நம்பலாம்.தமிழ் புத்தாண்டு நாளில், பிறருக்கு தானம் செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம். தண்ணீர், மோர், குடை, செருப்பு, உணவு உள்ளிட்ட அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு, நம்மால் முடிந்தவற்றை மக்களுக்கு வழங்கி வழிபாடு செய்யலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, உணவு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு தினத்தில் இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சி மிகுந்த பானங்களை தானம் செய்வதால், வாழ்க்கையில் நமக்கு உணவு பஞ்சம் ஏற்படாது என்று முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் அன்றைய தினத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்கினால் குறையாத செல்வம் நம்மைத் தேடி வரும் என்றும், மஞ்சள், குங்குமம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தால், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.ஆகவே இந்த சிறப்பான நாளில் அதிகாலை எழுந்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து இஷ்ட தெய்வங்களை வழிபடலாம். புது வருடத்தில் தாம்பூல தட்டில் தாம்பூல பொருட்கள், நவதானியங்கள், மா, பலா, வாழை வைத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பை தரும்.