• May 04 2024

திடீரென திரும்பிய கார்...! கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள்- அம்பாறையில் பாரிய விபத்து- பலர் காயம்...!

Sharmi / Apr 13th 2024, 11:40 am
image

Advertisement

அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வாகனம், மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி,பேருந்து என்பன ஒன்றன் பின் ஒன்றாக மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி  காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



திடீரென திரும்பிய கார். கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள்- அம்பாறையில் பாரிய விபத்து- பலர் காயம். அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.குறித்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வாகனம், மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி,பேருந்து என்பன ஒன்றன் பின் ஒன்றாக மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.குறித்த விபத்தில் சிக்கி  காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement