• Apr 16 2024

'ஐபோன்' பாவனையாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி! samugammedia

Chithra / May 22nd 2023, 6:29 pm
image

Advertisement

தற்போதைய நவீன உலகத்தில் வட்சப் ஆனது ஒரு மனிதனுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செயலியாக மாற்றம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வாட்சப் நிறுவனத்தின் தாயகமான மெட்டா தற்போது பயனர்களுக்கு புதுப்புது பயனுள்ள அம்சங்களை பகிர்ந்து வருகின்றது.

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது பெரும்பாலும் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு குறுஞ்செய்தியின்போது ஸ்டிக்கர்களைச் சேர்க்க விரும்பினால் தற்போது வரை போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளின் பயன்பாட்டையே நம்பியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வட்சப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்தவகையில் மூன்றாம் தர செயலிகள் இல்லாமல் ஒரு படத்தை வட்சப் செயலியியை கொண்டு அதை ஸ்டிக்கராக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஐ.ஓ.எஸ் (IOS) இயங்குதள சாதனங்களான ஐ போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது வரை இந்த அம்சம் வட்சப் பீட்டா நிலையில் (iOS 23.10.0.74) மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் வாட்ஸ்அப் தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது, chat lock வசதி, பொருத்தமற்ற செய்திகளைப் புகாரளிக்கும் வசதி மற்றும் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அமைதிப்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


'ஐபோன்' பாவனையாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி samugammedia தற்போதைய நவீன உலகத்தில் வட்சப் ஆனது ஒரு மனிதனுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செயலியாக மாற்றம் பெற்றுள்ளது.அந்த வகையில் வாட்சப் நிறுவனத்தின் தாயகமான மெட்டா தற்போது பயனர்களுக்கு புதுப்புது பயனுள்ள அம்சங்களை பகிர்ந்து வருகின்றது.நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பேசும்போது பெரும்பாலும் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு குறுஞ்செய்தியின்போது ஸ்டிக்கர்களைச் சேர்க்க விரும்பினால் தற்போது வரை போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளின் பயன்பாட்டையே நம்பியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வட்சப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.அந்தவகையில் மூன்றாம் தர செயலிகள் இல்லாமல் ஒரு படத்தை வட்சப் செயலியியை கொண்டு அதை ஸ்டிக்கராக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அம்சம் ஐ.ஓ.எஸ் (IOS) இயங்குதள சாதனங்களான ஐ போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்த அம்சம் வட்சப் பீட்டா நிலையில் (iOS 23.10.0.74) மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.சமீபத்தில் வாட்ஸ்அப் தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது, chat lock வசதி, பொருத்தமற்ற செய்திகளைப் புகாரளிக்கும் வசதி மற்றும் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அமைதிப்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement