• May 03 2024

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Jul 21st 2023, 6:26 am
image

Advertisement

கருங்கடல் வழியாக உக்ரைன் துறைமுகங்களை நெருங்கும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கிரிமியா பாலத்தின் மீதான தாக்குதலை உக்ரைன் தமது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நடத்தியதாக ரஷ்ய அரசாங்கம் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து கருங்கடலில் செயற்பாடுகள் தொடர்பில் சூடான சூழல் உருவானது.

இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனுக்கு செல்லும் கப்பல்கள், உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களாக கருதப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

கருங்கடலில் உக்ரைன் நோக்கி பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் இராணுவக் கப்பல்களாக கருதுவோம் என்றும் ரஷ்யா அறிவித்தது.

கருங்கடல் வழியாக தானியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இருந்து திங்களன்று மாஸ்கோ விலகியதைத் தொடர்ந்து, ரஷ்ய அரசாங்கம் அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களை போர் இலக்குகளாகக் கருதுவதாக அறிவித்தது.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் கூறுகையில், ரஷ்யா பொதுமக்கள் கப்பல்களைத் தாக்கி உக்ரைன் மீது குற்றம் சாட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி உக்ரைன் துறைமுகங்களை நெருங்கும் போது ரஷ்யா அதிக குண்டுகளை வீசியுள்ளது.

ரஷ்யாவின் முடிவால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை கோதுமை விலைகள் முந்தைய நாளிலிருந்து 8.2% அதிகரித்து டன்னுக்கு 253.75 யூரோக்களாகவும், சோளத்தின் விலை 5.4% ஆகவும் உயர்ந்தது.

இதற்கிடையில், அமெரிக்காவில் கோதுமை விலை 8.5% அதிகரித்துள்ளது.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக சர்வதேச தானிய ஒப்பந்தத்திற்கு திரும்புவேன் என்று கூறினார்.

அதன்படி, ரஷ்ய தானியங்கள் மற்றும் உரங்கள் விற்பனை மீதான தடைகளை நீக்கவும், ரஷ்யாவின் விவசாய வங்கியை உலகளாவிய கட்டண முறைக்கு மீண்டும் இணைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.


உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு samugammedia கருங்கடல் வழியாக உக்ரைன் துறைமுகங்களை நெருங்கும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கிரிமியா பாலத்தின் மீதான தாக்குதலை உக்ரைன் தமது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நடத்தியதாக ரஷ்ய அரசாங்கம் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து கருங்கடலில் செயற்பாடுகள் தொடர்பில் சூடான சூழல் உருவானது.இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனுக்கு செல்லும் கப்பல்கள், உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களாக கருதப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.கருங்கடலில் உக்ரைன் நோக்கி பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் இராணுவக் கப்பல்களாக கருதுவோம் என்றும் ரஷ்யா அறிவித்தது.கருங்கடல் வழியாக தானியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இருந்து திங்களன்று மாஸ்கோ விலகியதைத் தொடர்ந்து, ரஷ்ய அரசாங்கம் அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களை போர் இலக்குகளாகக் கருதுவதாக அறிவித்தது.இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் கூறுகையில், ரஷ்யா பொதுமக்கள் கப்பல்களைத் தாக்கி உக்ரைன் மீது குற்றம் சாட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி உக்ரைன் துறைமுகங்களை நெருங்கும் போது ரஷ்யா அதிக குண்டுகளை வீசியுள்ளது.ரஷ்யாவின் முடிவால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை கோதுமை விலைகள் முந்தைய நாளிலிருந்து 8.2% அதிகரித்து டன்னுக்கு 253.75 யூரோக்களாகவும், சோளத்தின் விலை 5.4% ஆகவும் உயர்ந்தது.இதற்கிடையில், அமெரிக்காவில் கோதுமை விலை 8.5% அதிகரித்துள்ளது.முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக சர்வதேச தானிய ஒப்பந்தத்திற்கு திரும்புவேன் என்று கூறினார்.அதன்படி, ரஷ்ய தானியங்கள் மற்றும் உரங்கள் விற்பனை மீதான தடைகளை நீக்கவும், ரஷ்யாவின் விவசாய வங்கியை உலகளாவிய கட்டண முறைக்கு மீண்டும் இணைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement