• Mar 10 2025

இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும்? தயாசிறி ஆளும்கட்சியிடம் கேள்வி!

Chithra / Mar 8th 2025, 3:56 pm
image


எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நாடாளுமன்ற  உறுப்பினர் தயாசிறி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். 

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், காதி  நீதிமன்றங்களில் பெண்களுக்கு  பிரதிநிதித்துவம் எடுக்க வாய்ப்புகள் இல்லை. பெண்களுக்கு அங்கு நீதிபதிகளாக கடமையாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அந்த சட்டம் பற்றி எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசேடமாக திருமணம் செய்யும் வயது பற்றிய பிரச்சினை காணப்படுகிறது. 

ஆகவே நான் கேட்கிறேன் எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். விரைவாக இதனை செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனத்தெரிவித்தார்.

இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும் தயாசிறி ஆளும்கட்சியிடம் கேள்வி எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நாடாளுமன்ற  உறுப்பினர் தயாசிறி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும், காதி  நீதிமன்றங்களில் பெண்களுக்கு  பிரதிநிதித்துவம் எடுக்க வாய்ப்புகள் இல்லை. பெண்களுக்கு அங்கு நீதிபதிகளாக கடமையாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.அந்த சட்டம் பற்றி எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. விசேடமாக திருமணம் செய்யும் வயது பற்றிய பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே நான் கேட்கிறேன் எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். விரைவாக இதனை செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனத்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement