• Apr 28 2024

கோட்டா ஆட்சியில் பூனைக்குட்டிகள் போன்று பதுங்கி இருந்த அரசியல் வாதிகள் எங்கே..? நிமல் காட்டம் samugammedia

Chithra / Oct 27th 2023, 8:48 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், நாமல் ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்த நிலையில் இப்போது நாய்களைப் போல குரைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை தொடர்பில், ஜனாதிபதியை, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விமர்சித்தமை குறித்தே நிமல் லன்சா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார். நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும் அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது சொந்த சிறிய தந்தை கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது, எதுவும் கூறாத நாமல், ஜனாதிபதி விக்ரமசிங்க சில அமைச்சுக்களை மாற்றியமைத்த போது, ‘பயனற்ற சண்டி பேச்சுக்களை’ வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கோட்டா ஆட்சியில் பூனைக்குட்டிகள் போன்று பதுங்கி இருந்த அரசியல் வாதிகள் எங்கே. நிமல் காட்டம் samugammedia  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், நாமல் ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்த நிலையில் இப்போது நாய்களைப் போல குரைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை தொடர்பில், ஜனாதிபதியை, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விமர்சித்தமை குறித்தே நிமல் லன்சா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.அமைச்சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார். நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும்.ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும் அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை தனது சொந்த சிறிய தந்தை கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது, எதுவும் கூறாத நாமல், ஜனாதிபதி விக்ரமசிங்க சில அமைச்சுக்களை மாற்றியமைத்த போது, ‘பயனற்ற சண்டி பேச்சுக்களை’ வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement