தேர்தல்காலங்களில் பெற்றோல் விலை உச்சபட்சமாக குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள் என ஆளும்கட்சியை நோக்கி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
வலுசக்தியமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எரிபொருள் விலையை உச்சபட்ச அளவில் குறைப்பதாக தெரிவித்திருந்தீர்கள். தற்போதைய ஜனாதிபதி எரிபொருள் விலையை குறைக்க முடியும், 100 ரூபாய்க்கும் அதிகமான வரி காணப்படுகிறது,
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது கடன்படாது என குறிப்பிட்டார். நிவாரண விலையில் எரிபொருளை நுகர்வோருக்கு கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அன்று தேர்தல் முறைகளில் அவர் குறிப்பிட்ட அந்தக் கருத்தை அரசாங்கம் செயற்படுத்தும் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களுக்கு ஏன் இதனை நீங்கள் நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள்?
இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரமானதொரு பதிலை வழங்குமாறு வலுசக்தி அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு குரங்கினால் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதாக சர்வதேச ஊடக நிறுவனங்கள் சர்வதேசத்திற்கு செய்திகளை வழங்கி இருந்தன.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நேரடியான முதலீடுகள் இந்த நாட்டிற்கு அதிகரிக்கப்படுமா?
இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் போது தெளிவான பதிலை வழங்க வேண்டியது உங்களுடைய பணியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பெற்றோல் விலைக் குறைப்பு எங்கே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி தேர்தல்காலங்களில் பெற்றோல் விலை உச்சபட்சமாக குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள் என ஆளும்கட்சியை நோக்கி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.வலுசக்தியமைச்சு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எரிபொருள் விலையை உச்சபட்ச அளவில் குறைப்பதாக தெரிவித்திருந்தீர்கள். தற்போதைய ஜனாதிபதி எரிபொருள் விலையை குறைக்க முடியும், 100 ரூபாய்க்கும் அதிகமான வரி காணப்படுகிறது,பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது கடன்படாது என குறிப்பிட்டார். நிவாரண விலையில் எரிபொருளை நுகர்வோருக்கு கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.அன்று தேர்தல் முறைகளில் அவர் குறிப்பிட்ட அந்தக் கருத்தை அரசாங்கம் செயற்படுத்தும் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களுக்கு ஏன் இதனை நீங்கள் நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள்இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரமானதொரு பதிலை வழங்குமாறு வலுசக்தி அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.ஒரு குரங்கினால் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதாக சர்வதேச ஊடக நிறுவனங்கள் சர்வதேசத்திற்கு செய்திகளை வழங்கி இருந்தன.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நேரடியான முதலீடுகள் இந்த நாட்டிற்கு அதிகரிக்கப்படுமா இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் போது தெளிவான பதிலை வழங்க வேண்டியது உங்களுடைய பணியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.