எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அந்த கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தங்களது கட்சியின் வேட்பாளர் பெயர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படும் என குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் 160 தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் கட்சி பணிகள் இடம்பெறவுள்ளதால் அதற்கு ஆதரவளிக்குமாறு கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ நேற்றைய சந்திப்பின்போது கோரியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அந்த கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தங்களது கட்சியின் வேட்பாளர் பெயர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படும் என குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.இதேவேளை, எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் 160 தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் கட்சி பணிகள் இடம்பெறவுள்ளதால் அதற்கு ஆதரவளிக்குமாறு கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ நேற்றைய சந்திப்பின்போது கோரியுள்ளார்.