• May 02 2024

கோல்டன் பூட் விருதை வெல்லப்போவது யார்? வாய்ப்புகளை இழக்கும் மெஸ்ஸி !!

crownson / Dec 12th 2022, 9:02 am
image

Advertisement

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் கோல்டன் பூட் விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கட்டாரில் களைகட்டி வரும் 22 வது உலகக் கோப்பை கால்பந்தில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

காலிறுதி ஆட்டங்கள் வரை நிறைவடைந்துள்ள நிலையில் 32 அணிகளிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதிற்கான பந்தயத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே ஐந்து கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு கோலும், டென்மார்க் அணிக்கு எதிராக இரண்டு கோலும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

காலிறுதிக்கு முந்திய சுற்றில் போலந்து அணிக்கு எதிராக இவர் அடித்த இரண்டு கோல் அணியை காலிறுதிக்கு முன்னேற வைத்தது.

அத்துடன் ஐந்து கோல்களும் பீல்ட் கோல் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி நான்கு கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இரண்டு பெனால்டி, இரண்டு பீல்ட் கோல் அடித்து அணியை அரையிறுதி வரை அழைத்து வந்துள்ளார்.

பிரான்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திரம் ஆலிவர் ஜீரூட் நான்கு கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த மூன்று ஜாம்பவான்களுக்கும் இன்னும் அரையிறுதி, இறுதி போட்டிகள் இருப்பதால் கோல்டன் பூட் விருதை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கோல்டன் பூட் விருதை வெல்லப்போவது யார் வாய்ப்புகளை இழக்கும் மெஸ்ஸி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் கோல்டன் பூட் விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.கட்டாரில் களைகட்டி வரும் 22 வது உலகக் கோப்பை கால்பந்தில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் வரை நிறைவடைந்துள்ள நிலையில் 32 அணிகளிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் விருதிற்கான பந்தயத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே ஐந்து கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு கோலும், டென்மார்க் அணிக்கு எதிராக இரண்டு கோலும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.காலிறுதிக்கு முந்திய சுற்றில் போலந்து அணிக்கு எதிராக இவர் அடித்த இரண்டு கோல் அணியை காலிறுதிக்கு முன்னேற வைத்தது. அத்துடன் ஐந்து கோல்களும் பீல்ட் கோல் என்பது கூடுதல் சிறப்பாகும். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் மெஸ்ஸி நான்கு கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இரண்டு பெனால்டி, இரண்டு பீல்ட் கோல் அடித்து அணியை அரையிறுதி வரை அழைத்து வந்துள்ளார்.பிரான்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திரம் ஆலிவர் ஜீரூட் நான்கு கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்த மூன்று ஜாம்பவான்களுக்கும் இன்னும் அரையிறுதி, இறுதி போட்டிகள் இருப்பதால் கோல்டன் பூட் விருதை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement