• May 10 2024

அரகலயவின் பின்னணியில் யார்? - கண்டறிய முழு அதிகாரமுடைய ஜனாதிபதி ஆணைக்குழு விரைவில்? samugammedia

Chithra / Apr 30th 2023, 11:10 am
image

Advertisement

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு தேவையாக அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

காலிமுத்திடல் போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு, முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.


ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, பணம் செலவழித்து ஆதரவு அளித்தவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். 

பல்வேறு நபர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை முழுமையாக உண்மை என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


போராட்டத்தின் போதும் இடம்பெற்ற வன்முறையின் போதும் முப்படையினரும் மௌனமாக செயற்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தது என்பதும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களை தூண்டி விட்டு நாட்டின் சகல செயற்பாடுகளையும் சீர்குலைத்த இந்த போராட்டத்தின் உண்மையான தகவல்களை கண்டறிந்து நாட்டை இந்த 

நிலைக்கு தள்ளும் நபர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

அரகலயவின் பின்னணியில் யார் - கண்டறிய முழு அதிகாரமுடைய ஜனாதிபதி ஆணைக்குழு விரைவில் samugammedia காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு தேவையாக அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.காலிமுத்திடல் போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு, முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.ஆளும் தரப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முறையான கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, பணம் செலவழித்து ஆதரவு அளித்தவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். பல்வேறு நபர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை முழுமையாக உண்மை என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.போராட்டத்தின் போதும் இடம்பெற்ற வன்முறையின் போதும் முப்படையினரும் மௌனமாக செயற்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கு யார் உத்தரவு பிறப்பித்தது என்பதும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்களை தூண்டி விட்டு நாட்டின் சகல செயற்பாடுகளையும் சீர்குலைத்த இந்த போராட்டத்தின் உண்மையான தகவல்களை கண்டறிந்து நாட்டை இந்த நிலைக்கு தள்ளும் நபர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement