• May 02 2024

பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற சட்ட மூலத்தை எதிர்க்காத சிங்கள பேரினவாதம் 13ஐ எதிர்ப்பது ஏன்..???

Sharmi / Jan 31st 2023, 3:12 pm
image

Advertisement

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வினை அரசாங்கம் தாராவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாடு உருப்படுவதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடையாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஆனால் சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளான விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கூடாதென கருத்து வெளியிட்டு வருவதாக கோவிந்தன் கருனாகரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பிரந்தியங்களின் ஒன்றியம் என்ற சட்ட மூலத்தை எதிர்க்காத இந்த இனவாதிகள் இன்று 13வது திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற சட்ட மூலத்தை எதிர்க்காத சிங்கள பேரினவாதம் 13ஐ எதிர்ப்பது ஏன். இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வினை அரசாங்கம் தாராவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாடு உருப்படுவதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடையாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஆனால் சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளான விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கூடாதென கருத்து வெளியிட்டு வருவதாக கோவிந்தன் கருனாகரம் குற்றம் சுமத்தியுள்ளார்.1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பிரந்தியங்களின் ஒன்றியம் என்ற சட்ட மூலத்தை எதிர்க்காத இந்த இனவாதிகள் இன்று 13வது திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement