• May 10 2024

வெளிநாட்டுக்கு வருமாறு கணவன் விடுத்த கோரிக்கையை மறுத்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு SamugamMedia

Chithra / Feb 20th 2023, 8:41 am
image

Advertisement

இத்தாலிக்கு வருமாறு பலமுறை விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்ததால், மனவேதனை அடைந்த இத்தாலியில் வசிக்கும் இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது தற்கொலையை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பாக சாட்சியமளிக்கும் இறந்தவரின் சகோதரர், தானும் தனது சகோதரனும் இத்தாலியில் பணிபுரிவதாகவும், ஜனவரி 23 ஆம் திகதி நண்பர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், தனது சகோதரனின் தற்கொலை குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் கூறினார்.


இறந்தவரின் 26 வயதுடைய மனைவி, பிபிலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். தமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும், இத்தாலிக்கு வருமாறு கணவர் பலமுறை கூறியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். தற்கொலை செய்து கொள்வதாக கணவர் பலமுறை கூறியதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மனைவி உடலை ஏற்க மறுத்ததால், இறுதிக் கிரியைக்காக இறந்தவரின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.


வெளிநாட்டுக்கு வருமாறு கணவன் விடுத்த கோரிக்கையை மறுத்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு SamugamMedia இத்தாலிக்கு வருமாறு பலமுறை விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்ததால், மனவேதனை அடைந்த இத்தாலியில் வசிக்கும் இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தனது தற்கொலையை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்.நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மரணம் தொடர்பாக சாட்சியமளிக்கும் இறந்தவரின் சகோதரர், தானும் தனது சகோதரனும் இத்தாலியில் பணிபுரிவதாகவும், ஜனவரி 23 ஆம் திகதி நண்பர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், தனது சகோதரனின் தற்கொலை குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் கூறினார்.இறந்தவரின் 26 வயதுடைய மனைவி, பிபிலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். தமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும், இத்தாலிக்கு வருமாறு கணவர் பலமுறை கூறியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். தற்கொலை செய்து கொள்வதாக கணவர் பலமுறை கூறியதாக அவர் கூறினார்.இதற்கிடையில், மனைவி உடலை ஏற்க மறுத்ததால், இறுதிக் கிரியைக்காக இறந்தவரின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement