• May 02 2024

ஐபோன் 14 நோட்டிஃபிகேஷனால் உயிர் பிழைத்த மனைவி - நெகிழ்ந்த கணவர்!

Chithra / Dec 15th 2022, 6:07 pm
image

Advertisement

ஐபோன் 14 மாடலின் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் நபர் ஒருவருக்கு தனது மனைவி விபத்தில் சிக்கிய தகவல் கொடுத்தது. 

இதையடுத்து கணவர் சரியான நேரத்தில் விபத்து பகுதிக்கு விரைந்ததால், மனைவி உயிர்பிழைத்தார். இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. 

மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார். 

கடைவீதிக்கு சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது, திடீரென கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தில் சிக்கியதால் அலறி இருக்கிறார். 

இதோடு அவரின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு இருக்கிறது.


நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்று இருந்தது. நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். 

ஆம்புலன்ஸ் வரும் முன் சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது.

ஹெல்த் ஆப்-னுள் பயனர்கள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களில் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சத்தை வழங்கும் மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்டறிந்து செயல்படுகிறது.

ஐபோன் 14 நோட்டிஃபிகேஷனால் உயிர் பிழைத்த மனைவி - நெகிழ்ந்த கணவர் ஐபோன் 14 மாடலின் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் நபர் ஒருவருக்கு தனது மனைவி விபத்தில் சிக்கிய தகவல் கொடுத்தது. இதையடுத்து கணவர் சரியான நேரத்தில் விபத்து பகுதிக்கு விரைந்ததால், மனைவி உயிர்பிழைத்தார். இதுபற்றிய தகவல் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார். கடைவீதிக்கு சென்றிருந்த மனைவி, காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அப்போது, திடீரென கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி விபத்தில் சிக்கியதால் அலறி இருக்கிறார். இதோடு அவரின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட சில நொடிகளில் கணவருக்கு மனைவியின் ஐபோனில் இருந்து நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு இருக்கிறது.நோட்டிஃபிகேஷனில் மனைவி இருக்கும் இடத்தின் சரியான லொகேஷன் இடம்பெற்று இருந்தது. நோட்டிஃபிகேஷனை பார்த்து விபத்து பகுதிக்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். ஆம்புலன்ஸ் வரும் முன் சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றிருக்கிறார். கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் எமர்ஜன்சி SOS மூலம் முதலில் தொடர்பு கொள்ளப்பட வேண்டியவருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்புகிறது.ஹெல்த் ஆப்-னுள் பயனர்கள் எமர்ஜன்சி காண்டாக்ட்களை சேர்க்க முடியும். ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களில் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சத்தை வழங்கும் மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்டறிந்து செயல்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement