• Mar 20 2025

வனவிலங்கு அலுவலக அதிகாரி மாயம்; மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Chithra / Mar 19th 2025, 4:30 pm
image


பல வருடங்களாக காணாமல் போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய அதபத்து முதியன்சேலாகே சுமேத புத்ததாச என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவர் மே 2017 முதல் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில், காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் மனைவி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தநிலையில், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 - 8594912 அல்லது 011 – 2392900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


வனவிலங்கு அலுவலக அதிகாரி மாயம்; மக்களின் உதவியை நாடும் பொலிஸார் பல வருடங்களாக காணாமல் போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய அதபத்து முதியன்சேலாகே சுமேத புத்ததாச என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் மே 2017 முதல் காணாமல் போயுள்ளார்.இது தொடர்பில், காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் மனைவி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.இந்தநிலையில், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 - 8594912 அல்லது 011 – 2392900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement