• Nov 19 2024

அநுரவின் ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்படுமா? இல்லையா? பெற்றோர்கள் கேள்வி!

Tamil nila / Nov 11th 2024, 7:01 pm
image

அநுரவின் ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அது ஒழிக்கப்படுமா இல்லையா அல்லது இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அது ஒழிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

நடைபெற்று முடிந்த மாகாண மட்ட நாட்டிய நாடகம் போட்டியில் மோசடி மூலம் உடுத்துறை மகா வித்தியாலமானது முதல் நிலை பெற்று, தேசிய ரீதியிலான போட்டியிலும் பங்குபற்றி  முதலிடம் பெற்றமை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரியவருகையில்,

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற நாட்டிய நாடகம் போட்டியில் வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இருந்து எமது பிள்ளைகள் பங்கு பற்றினார்கள். இந்த போட்டியானது திறந்த வயது பிரிவு என்ற வகையில் தரம் 9 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பங்கு பற்ற முடியும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் உடுத்துறை மகாவித்தியாலயமானது குறித்த போட்டியில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை இணைத்து, மோசடி செய்து போட்டியில் ஈடுபட்டு முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. இரண்டாவது இடத்தினை வீரசிங்கம் மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களான எமது பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில் குறித்த விடயத்தை அறிந்து கொண்ட நாங்கள் பாடசாலைக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உரிய முறையில் தெரியப்படுத்தினோம்.

இந்நிலையில் அந்த பாடசாலையானது போட்டியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் தடை விதித்தனர்.

இருப்பினும் அவர்களது கட்டளைகளை மீறி, அவர்களுக்கு தெரியாமல் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பணிபுரியும் அதிகாரியான ராஜன் என்பவர் தன்னிச்சையான முடிவெடுத்து குறித்த பாடசாலையை தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்கு அனுமதித்தார். அவர்கள் தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள் என்றே  எமக்குத் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியில் பங்கு பற்றி முதலிடம் பெற்றார்கள் என்ற விடயம் இன்றையதினமே (11) எமக்கு தெரியும்.

 அவர்கள் தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றிய விடயம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு நாங்கள் கூறிய பின்னரே தெரியும்.

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் உத்தரவுகளை மீறி ஒரு அதிகாரி செயற்படுகின்றார் என்றால் அவரது தன்னதிக்க சக்தி எந்த அளவிற்கு பலம் பெற்றுள்ளது என கவனிக்க வேண்டும்.

இது குறித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அந்த வகையில் சம்பத்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

எமது பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் இனி மேலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது. அனுரவின் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என கூறினார்கள். ஆனால் அது ஒழிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் ஊழலானது கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திரு.பிரெட்லீ மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக்டிரஞ்சன் ஆகியோரை தொடர்பு கொண்டு வினவியவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

அநுரவின் ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்படுமா இல்லையா பெற்றோர்கள் கேள்வி அநுரவின் ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அது ஒழிக்கப்படுமா இல்லையா அல்லது இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அது ஒழிக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.நடைபெற்று முடிந்த மாகாண மட்ட நாட்டிய நாடகம் போட்டியில் மோசடி மூலம் உடுத்துறை மகா வித்தியாலமானது முதல் நிலை பெற்று, தேசிய ரீதியிலான போட்டியிலும் பங்குபற்றி  முதலிடம் பெற்றமை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரியவருகையில்,மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற நாட்டிய நாடகம் போட்டியில் வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இருந்து எமது பிள்ளைகள் பங்கு பற்றினார்கள். இந்த போட்டியானது திறந்த வயது பிரிவு என்ற வகையில் தரம் 9 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பங்கு பற்ற முடியும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இருப்பினும் உடுத்துறை மகாவித்தியாலயமானது குறித்த போட்டியில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை இணைத்து, மோசடி செய்து போட்டியில் ஈடுபட்டு முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. இரண்டாவது இடத்தினை வீரசிங்கம் மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களான எமது பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள்.இந்நிலையில் குறித்த விடயத்தை அறிந்து கொண்ட நாங்கள் பாடசாலைக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உரிய முறையில் தெரியப்படுத்தினோம்.இந்நிலையில் அந்த பாடசாலையானது போட்டியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் தடை விதித்தனர்.இருப்பினும் அவர்களது கட்டளைகளை மீறி, அவர்களுக்கு தெரியாமல் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பணிபுரியும் அதிகாரியான ராஜன் என்பவர் தன்னிச்சையான முடிவெடுத்து குறித்த பாடசாலையை தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றுவதற்கு அனுமதித்தார். அவர்கள் தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள் என்றே  எமக்குத் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியில் பங்கு பற்றி முதலிடம் பெற்றார்கள் என்ற விடயம் இன்றையதினமே (11) எமக்கு தெரியும். அவர்கள் தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றிய விடயம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு நாங்கள் கூறிய பின்னரே தெரியும்.வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் உத்தரவுகளை மீறி ஒரு அதிகாரி செயற்படுகின்றார் என்றால் அவரது தன்னதிக்க சக்தி எந்த அளவிற்கு பலம் பெற்றுள்ளது என கவனிக்க வேண்டும்.இது குறித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அந்த வகையில் சம்பத்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.எமது பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் இனி மேலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது. அனுரவின் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என கூறினார்கள். ஆனால் அது ஒழிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இருப்பினும் ஊழலானது கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இது குறித்து வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திரு.பிரெட்லீ மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக்டிரஞ்சன் ஆகியோரை தொடர்பு கொண்டு வினவியவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement