• Nov 26 2024

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மாலைத்தீவு ஜனாதிபதி- இருதரப்பு உறவில் மாற்றமா?

Tamil nila / Jun 7th 2024, 7:00 pm
image

இந்தியாவின் புதுடில்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மாலத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழாவில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை உயர் அதிகாரிகள் சிலருடன் முகமது மூயிஸ் புதுடில்லிக்கு புறப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தியோகப்பூர்வ விஜயம் குறித்து மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கவில்லை.

கடந்த  புதன்கிழமை முகமது மூயிஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்தார்.

அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி மாலைத்தீவு ஜனாதிபதியாக சீனாவுக்கு ஆதரவாளராக கருதப்படும் அவர் பதவியேற்றதன் பின்னர் முதல் உத்தியோகப்பூர்வ இந்தியப் பயணம் இதுவாகும்.

பதவிப் பிரமாணம் செய்த சில மணி நேரங்களிலேயே, இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, சுமார் 88 இந்திய ராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து அகற்றுமாறு மூயிஸ் கோரிக்கை விடுத்தார்.

மூன்று விமான தளங்களிலிருந்து இராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் மற்றும் அவர் வழங்கிய காலவகாசத்திற்குள் அதாவது மே மாதம் 10ஆம் திகதியன்று இந்திய இராணுவர்கள் அனைவரும் வெளியேறினர்.

இவ்வாறு இரதரப்பு உறவில் விரிசல் காணப்படுகின்ற நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் அண்டைய நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மாலைத்தீவு ஜனாதிபதி- இருதரப்பு உறவில் மாற்றமா இந்தியாவின் புதுடில்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மாலத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விழாவில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை உயர் அதிகாரிகள் சிலருடன் முகமது மூயிஸ் புதுடில்லிக்கு புறப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தியோகப்பூர்வ விஜயம் குறித்து மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கவில்லை.கடந்த  புதன்கிழமை முகமது மூயிஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்தார்.அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி மாலைத்தீவு ஜனாதிபதியாக சீனாவுக்கு ஆதரவாளராக கருதப்படும் அவர் பதவியேற்றதன் பின்னர் முதல் உத்தியோகப்பூர்வ இந்தியப் பயணம் இதுவாகும்.பதவிப் பிரமாணம் செய்த சில மணி நேரங்களிலேயே, இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, சுமார் 88 இந்திய ராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து அகற்றுமாறு மூயிஸ் கோரிக்கை விடுத்தார்.மூன்று விமான தளங்களிலிருந்து இராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் மற்றும் அவர் வழங்கிய காலவகாசத்திற்குள் அதாவது மே மாதம் 10ஆம் திகதியன்று இந்திய இராணுவர்கள் அனைவரும் வெளியேறினர்.இவ்வாறு இரதரப்பு உறவில் விரிசல் காணப்படுகின்ற நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவில் அண்டைய நாடுகளான பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement