• May 10 2024

அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா..? நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Nov 29th 2023, 11:14 am
image

Advertisement

 

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் இன்னமும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுகாதாரத் திணைக்களத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு குறைவாகவே உள்ளது.

அரசின் செலவினங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்தை இலக்காகக் கொண்டு, வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மிகவும் வலுவான மற்றும் பயனர்களுக்கு நட்பான நடைமுறையை அறிமுகப்படுத்தி வரி வலையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா. நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்  அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் இன்னமும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சுகாதாரத் திணைக்களத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு குறைவாகவே உள்ளது.அரசின் செலவினங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்தை இலக்காகக் கொண்டு, வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மிகவும் வலுவான மற்றும் பயனர்களுக்கு நட்பான நடைமுறையை அறிமுகப்படுத்தி வரி வலையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement