இலங்கை டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போது, சிறந்த களத்தடுப்பு வீரர்களை அணியில் சேர்க்க தாம் செயற்பட்டதாக புதிய இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
நாளை (14) ஆரம்பமாகவுள்ள 20-20 போட்டித் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து மேலும் தெரிவிக்கையில், சிரேஷ்ட வீரர்கள் அணியில் இணைந்துள்ளதால் புதிய வீரர்களுக்கு நல்ல அனுபவத்தைப் பெற முடியும்.
சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20-20 தொடரின் முதல் போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளைய போட்டிக்காக பெதும் நிஸ்ஸங்க தயாராகவுள்ளதாக வனிந்து ஹசரங்க இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வனிந்து ஹசரங்க, சர்வதேச 20-20 போட்டிக்கான இலங்கை அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
வனிந்துவின் திட்டம் நிறைவேறுமா வெளியான தகவல். இலங்கை டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போது, சிறந்த களத்தடுப்பு வீரர்களை அணியில் சேர்க்க தாம் செயற்பட்டதாக புதிய இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.நாளை (14) ஆரம்பமாகவுள்ள 20-20 போட்டித் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து மேலும் தெரிவிக்கையில், சிரேஷ்ட வீரர்கள் அணியில் இணைந்துள்ளதால் புதிய வீரர்களுக்கு நல்ல அனுபவத்தைப் பெற முடியும்.சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20-20 தொடரின் முதல் போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.நாளைய போட்டிக்காக பெதும் நிஸ்ஸங்க தயாராகவுள்ளதாக வனிந்து ஹசரங்க இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.வனிந்து ஹசரங்க, சர்வதேச 20-20 போட்டிக்கான இலங்கை அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.