• May 04 2025

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக பெண் தெரிவு

Thansita / Feb 20th 2025, 3:07 pm
image

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்றையதினம் (19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025/26ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. 

இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான  புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் தேர்தல் மூலமாக தெரிவாகியுள்ளார்.

இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின்  2025/26ம் ஆண்டுக்கான வரலாற்றில் முதல் தடவையாக சங்கத் தலைவராக முதல் பெண் தலைவியாக அவர்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் தெரிவிற்காக மேற்படி தேர்தலில்  சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.இதில் சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா காரியப்பர் அதிக வாக்குகளைப் பெற்று   கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர்ந்து செயலாளர் , பொருளாளர் ,உள்ளிட்ட  இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய தலைவரான  சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா சாரிக் காரியப்பர்,  கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணியாக வரலாற்றில் இடம் பெறுகின்றார் என்பதுடன் கல்முனை மஹ்மூது மகளீர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவர்.

அத்துடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்க செயலாளரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர்  கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினராக சிறப்பாக செயற்பட்டுள்ளதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக பெண் தெரிவு கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்றையதினம் (19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025/26ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான  புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் தேர்தல் மூலமாக தெரிவாகியுள்ளார்.இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின்  2025/26ம் ஆண்டுக்கான வரலாற்றில் முதல் தடவையாக சங்கத் தலைவராக முதல் பெண் தலைவியாக அவர்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தலைவர் தெரிவிற்காக மேற்படி தேர்தலில்  சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.இதில் சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா காரியப்பர் அதிக வாக்குகளைப் பெற்று   கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர்ந்து செயலாளர் , பொருளாளர் ,உள்ளிட்ட  இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் புதிய தலைவரான  சிரேஷ்ட சட்டத்தரணி  ஆரிகா சாரிக் காரியப்பர்,  கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணியாக வரலாற்றில் இடம் பெறுகின்றார் என்பதுடன் கல்முனை மஹ்மூது மகளீர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவர்.அத்துடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்க செயலாளரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர்  கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினராக சிறப்பாக செயற்பட்டுள்ளதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now