• May 17 2024

விபத்தில் சிக்கி பெண் காவல்துறை உத்தியோகத்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

Chithra / Mar 21st 2024, 7:26 am
image

Advertisement

 

பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பாரவூர்தியொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக மத்துகம காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

களுத்துறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர் பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த பாரவூர்தியில் மோதுண்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடங்கொட, புஹம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த தமயந்தி வீரசூரிய என்ற பெண் உத்தியோகத்தரே இதன்போது  உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

விபத்தில் சிக்கி பெண் காவல்துறை உத்தியோகத்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு  பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பாரவூர்தியொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக மத்துகம காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.களுத்துறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காவல்துறை உத்தியோகத்தர் பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த பாரவூர்தியில் மோதுண்டுள்ளார்.பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொடங்கொட, புஹம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த தமயந்தி வீரசூரிய என்ற பெண் உத்தியோகத்தரே இதன்போது  உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement