களனி – திப்பிடிகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் கப்பம் கோரி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுத்து,
பெண் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபாயைக் கப்பமாகக் கோரியமை தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, இந்தச் சம்பவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கிரிபத்கொடை – தலுகம மற்றும் களனி – பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்கள் களனி பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 53 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் - வெளிநாட்டில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு களனி – திப்பிடிகொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் கப்பம் கோரி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுத்து, பெண் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபாயைக் கப்பமாகக் கோரியமை தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.அதற்கமைய, இந்தச் சம்பவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கிரிபத்கொடை – தலுகம மற்றும் களனி – பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.கைதானவர்கள் களனி பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 53 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.