• Sep 17 2024

நீதிமன்றங்களில் ஏற்பட்டுள்ள சட்டத்தின் தாமதங்களால் பாதிக்கப்படும் பெண்கள்!

Chithra / Jan 5th 2023, 3:21 pm
image

Advertisement

நீதிமன்றங்களில் ஏற்பட்டுள்ள சட்டத்தின் தாமதங்கள் காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோம், குடும்ப பிரச்சனை காரணமாக நீதிமன்றங்களுக்கு வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்திய போதும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தினார்.

எனவே சட்ட மறுசீரமைப்பு செய்யப்படுகின்ற இந்தவேளையிலேயே நீதிமன்றங்களில் இருக்கின்ற கலாசாரங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எவ்வாறான தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடியுமென்பதையும் ஆராயுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நீதிமன்றங்களில் ஏற்பட்டுள்ள சட்டத்தின் தாமதங்களால் பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றங்களில் ஏற்பட்டுள்ள சட்டத்தின் தாமதங்கள் காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.பாலியல் துஸ்பிரயோம், குடும்ப பிரச்சனை காரணமாக நீதிமன்றங்களுக்கு வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டிருந்தார்.இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்திய போதும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தினார்.எனவே சட்ட மறுசீரமைப்பு செய்யப்படுகின்ற இந்தவேளையிலேயே நீதிமன்றங்களில் இருக்கின்ற கலாசாரங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இவ்வாறான நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எவ்வாறான தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடியுமென்பதையும் ஆராயுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement